பா.ஜ.க வரக்கூடாது என்பதால் திமுகவை ஆதரிக்கும் அதிரையர்கள் - அதிரை பிறை கருத்துக்கணிப்பு

Editorial
0

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் கா.அண்ணாதுரையும், அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளராக என்.ஆர்.ரங்கராஜனும், அமமுக சார்பில் எஸ்.டி.எஸ். செல்வமும், நாம் தமிழர் கட்சி சார்பில் கீர்த்திகா மக்கள் நீதி மய்யம் சார்பில் சதாசிவமும் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், அதிரை பிறை சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அதிரையை சேர்ந்த 60.5% பேர் தி.மு.க.வை ஆதரிப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.வை ஏன் ஆதரிக்கிறீர்கள்? என்ற கருத்துக்கணிப்பை அதிரை பிறை சார்பில் நடத்தினோம். அதில் 59% பேர் பாஜக வந்துவிடக்கூடாது என்பதால் தி.மு.க.வை ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...