அதிரை இமாம் ஷாபி மாணவர்கள் தேசிய அளவிலான அறிவியல் ஆய்வு போட்டியில் சாதனை

Editorial
0

நாடு தழுவிய அறிவியல் ஆய்வுப் போட்டியினை OMEIAT அறக்கட்டளை ஏப்ரல் 3 & 4ஆம் தேதிகளில் இணையதளம் வாயிலாக நடத்தினர். அதில் பல மாநிலங்களில் இருந்து CBSE, International  schools உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணாக்கர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழகம் மற்றும் தெலுங்கானாவைச்சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் பங்கேற்ற நம் அதிராம்பட்டினம், இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் சிறப்பிடம் வகித்து முதல் நிலையில் தேர்ச்சியடைந்தனர்.

இதுபோன்ற நாடுதழுவிய போட்டியில் நம் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.

வெற்றி பெற்ற மாணவர் விவரம்:

*Primary Level*- Life Science  
முதல் பரிசு
ஆஃபியா- 4ம் வகுப்பு
ஆசிரியை: திருமதி. ஜீனத் பேகம்
Research Topic:
Rate of growth of plants in different types of water

*Middle School Level* - Life Science 
மூன்றாம் பரிசு
ஃபராஹ்- 8ம் வகுப்பு 
ஆசிரியை : திருமதி. கமலக்கண்ணி

Research Topic: Rate of growth of plants in different culture medium

*Junior Level* - Physical Sciences 
முதல்பரிசு 
சுஹைல்  9ஆம்  வகுப்பு
ஆசிரியர்: திரு. பூபேஷ்

Research Topic: Estimation of formic acid present in different types of ants

சாதனையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் அவ‌ர்களை பள்ளியின் அறங்காவலர்கள் மற்றும் தாளாளர் வாழ்த்தினர்.  வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர் நல்கிய ஒத்துழைப்புக்கு நன்றி. 

பள்ளி மேன்மேலும் அனைத்து துறைகளிலும் வளர துஆ செய்யுங்கள்.

-பள்ளி நிர்வாகம்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...