சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது. பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் கா.அண்ணாதுரையும், அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளராக என்.ஆர்.ரங்கராஜனும், அமமுக சார்பில் எஸ்.டி.எஸ். செல்வமும், நாம் தமிழர் கட்சி சார்பில் கீர்த்திகா மக்கள் நீதி மய்யம் சார்பில் சதாசிவமும் போட்டியட்டனர்.
இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ஆனால், பட்டுக்கோட்டை தொகுதியில் மாநிலம் மற்றும் தஞ்சை மாவட்ட சதவீதத்தை விட குறைவான சதவீத (71.75%) வாக்குகளே பதிவாகியுள்ளன.