இதையெல்லாம் கடந்து அதிர்ச்சிதரும் விசயமாக அமைந்துள்ள திமுகவின் சி.ஏ.ஏ. குறித்த வாக்குறுதி. CAA வில் குறிப்பிட்டுள்ள மூன்று நாடுகள் மட்டுமல்லாமல் நான்காவது நாடாக இலங்கையையும் சேர்க்க வேண்டும் என மத்தியரசை வலியுறுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
திமுக தன் ஆட்சி அமைந்ததும் கண்டிப்பாக எதிர்த்து பேசுவார்கள், சட்டப்பேரவையில் CAA-வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என்று நம்பிய இஸ்லாமிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சி.ஏ.ஏவின் முக்கிய பிரச்சனையே அதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுருமை கிடையாது என்ற விதிதான். அதை எதிர்த்து பேசாமல் மழுப்பியுள்ளது திமுக. அப்படியென்றால் சிஏஏவை எதிர்ப்பதாக திமுக நடத்திய பேரணி, கையெழுத்து இயக்கம் அனைத்தும் நாடகமா? சிஏஏவை எதிர்த்து அதிமுக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி திமுக, தற்போது அதை தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்காதது ஏன்?
இஸ்லாமியர்களை மட்டும் தவிர்த்து மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் CAA வை முற்றிலுமாக எதிர்க்காமல், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பட்டியலில் ஸ்ரீலங்காவை மட்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கை அறிவித்துள்ளது திமுக. இவர்கள்தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலரா??
பாஜக வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டினாலே முஸ்லிம்கள் வாக்குகளை பெற்றுவிடலாம், அவர்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக வந்துவிட்டதாகவே கருத முடிகிறது. வழக்கமாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளில் 50% தான் நிறைவேற்றுவார்கள். ஆனால், இங்கு தேர்தல் அறிக்கையில் கூட வாக்குறுதியளிக்காத திமுகவின் ஆட்சியில் முஸ்லிம்கள் நிலை எப்படி இருக்குமோ..?