சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அமமுக சார்பில் எஸ்.டி.எஸ். செல்வம் போட்டியிடுகிறார். இந்தநிலையில், அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமமுக-எஸ்.டி.பி.ஐ கூட்டணியில் உள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசதுத்தீன் உவைசி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், பா.ஜ.க., அ.தி.மு.க, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக அதிரை பிறையால் அம்பலப்படுத்தப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள காஸ்டிக் சோடா தொழிற்சாலை குறித்து உவைசி பேசியுள்ளார். காஸ்டிக் சோடா தொழிற்சாலையால் அதிரையின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என அவர் குற்றம்சாட்டினார்.
அதிராம்பட்டினத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி. கடந்த 2016 தேர்தலின்போதும் இதே வாக்குறுதியை திமுக அளித்திருந்தது. அப்போதும், இந்த தொழிற்சாலையினால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து நமது அதிரை பிறையில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
ஆனால், மீண்டும் அந்த தொழிற்சாலை திட்டத்தை திமுக இம்முறையும் குறிப்பிட்டுள்ளது. இதனால் காயல்பட்டினத்தில் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும், பொதுமக்கள் நோய் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் இணையதளத்தின் விரிவான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியின் இணைப்பு: https://www.adiraipirai.com/2021/03/blog-post_49.html?m=1