அதிரை பிறையின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவு... யாருக்கு வெற்றிவாய்ப்பு?

Editorial
0


சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் கா.அண்ணாதுரையும், அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளராக என்.ஆர்.ரங்கராஜனும், அமமுக சார்பில் எஸ்.டி.எஸ். செல்வமும், நாம் தமிழர் கட்சி சார்பில் கீர்த்திகா மக்கள் நீதி மய்யம் சார்பில் சதாசிவமும் போட்டியிடுகின்றனர்.

அனைத்து கட்சிகளும் பம்பரம் போல் சுழன்று தங்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிரை மக்களின் ஆதரவு எந்த கட்சி வேட்பாளருக்கு உள்ளது என்பதை அறிய இணைய வழியாக கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதன் படி தாங்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளோம் என்பதை பலர் தெரிவித்து இருந்தனர்.

அந்த வகையில் திமுகவுக்கு 60.5% பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 26% பேரும், அ.ம.மு.கவுக்கு 13.5% பேரும் வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளனர். அதிமுக - பாஜக கூட்டணி கட்சி வேட்பாளரான என்.ஆர்.ரங்கராஜனுக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.


குறிப்பு: இது அதிரை மக்கள் மட்டும் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெளியிடப்படும் முடிவுகளாகும், முழு தொகுதிக்கான நிலை வேறுபடலாம். அதுவும் இணையதளம் என்பது சமூகத்தின் ஒரு பங்குதான். களநிலவரமும் வேறுபடலாம். எனவே இந்த கருத்துக்கணிப்பின் சதவீதம் அப்படியே தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதை நாம் உறுதியாக கூறமுடியாது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...