சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் கா.அண்ணாதுரையும், அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளராக என்.ஆர்.ரங்கராஜனும், அமமுக சார்பில் எஸ்.டி.எஸ். செல்வமும், நாம் தமிழர் கட்சி சார்பில் கீர்த்திகா மக்கள் நீதி மய்யம் சார்பில் சதாசிவமும் போட்டியிடுகின்றனர்.
அனைத்து கட்சிகளும் பம்பரம் போல் சுழன்று தங்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், மாலை முரசு தொலைக்காட்சி தொகுதிவாரியாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக 44% வாக்குகளுடன் வெற்றிபெறும் என்றும், த.மா.கா. 41%, அமமுக 5%, நாம் தமிழர் கட்சி 3%, மக்கள் நீதி மய்யம் 1% வாக்குகளை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் அதிமுகவிலிருந்து பிரிந்து தனித்து போட்டியிடும் அமமுக வேட்பாளர் அதிமுக கூட்டணி வேட்பாளரான ரங்கராஜனுக்கு கிடைக்க வேண்டிய 5% வாக்குகளை பிரிப்பதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பின் வாயிலாக அறிய முடிகிறது.
உங்களின் கருத்து கணிப்பு எதன் அடிப்படையில் வெளியிட்டீர்கள்
ReplyDeleteஎமது சமுதாயத்தின் வெற்றி வேட்பாளர் அய்யா v.பாலகிருஷ்ணன் உங்களின் கருத்து கணிப்பினை தாண்டி வெற்றி பெறுவார்
ReplyDelete