அதிரை வழித்தடத்தில் சென்னையிலிருந்து ரயில்களை இயக்க கோரிக்கை..!

Editorial
0


பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கம், திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல இரயில் பாதையில் கீழ்க்கண்ட இரயில் வசதி வேண்டி சென்னை இரயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளது.

கோரிக்கை மனுவில், "தமிழகத்தில் வருகிற 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சென்னையில் தங்கி பணிபுரியும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டி ஏப்ரல் 5 ந்தேதி இரவு  சென்னையில் இருந்து  காரைக்குடிக்கு திருவாரூர் பட்டுக்கோட்டை வழியாக தேர்தல் சிறப்பு இரயில் விடவேண்டும்.

தேர்தல் முடிந்த பிறகு சென்னைக்கு திரும்பி செல்ல ஏதுவாக  ஏப்ரல் 6ந்தேதி இரவு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை திருவாரூர் வழியாக சென்னைக்கு தேர்தல் சிறப்பு இரயில் விடவேண்டும்.

மேலும் தினசரி திருச்சியில் இருந்து காரைக்குடி வரை வந்து செல்லும்  டெமு விரைவு இரயிலை  (06125/06126)அறந்தாங்கி பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டை க்கு நீட்டிக்க வேண்டும்.

இதனால் இப்பகுதியில் உள்ள பெரிய நகரமான திருச்சிக்கு அலுவலகம் செல்வோர் மாணாக்கர்கள் வியாபாரிகள் பொருட்கள் வாங்க செல்லும்  பயணிகள் அதிகம் பயணம் செய்வார்கள். மேலும் காய்கறிகள் மீன் பால் ஏற்றுமதி இறக்குமதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சென்னை எழும்பூரில் இருந்து திருவாரூர் பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு இருமுனைகளிலிருந்தும் இரவு நேர எக்ஸ்பிரஸ் இரயில்களை இயக்க வேண்டும்.

மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி க்கு தினசரி பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும். சரக்கு போக்குவரத்து இரயில்களையும் இயக்கிட வேண்டும்."

என கோரிக்கை வைத்துள்ளனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...