அதிரையை சேர்ந்த ஹாஜா மொய்னுத்தீன் தனது பேஸ்புக் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது...
"யார் என்ன சொன்னாலும் இந்த முறை மத சார்பற்ற கூட்டணியான திமுக கூட்டணி வரட்டும். வந்து என்ன செய்கிறார்கள் என்று பார்க்க ஒரு வாய்ப்பு கொடுப்போம்.. ஒரு வேளை இவர்களும் உள்ளடி வேலைகளை செய்தால் வேறு வழி இல்லாமல் அடுத்த ஐந்தாண்டு பொறுமை காத்து செல்வோம்.
ஒன்றுமட்டும் நிச்சயம் திமுக விடம் ஊழலற்ற நியாயமான ஆட்சி கிடைக்காது, அடிப்படை உரிமைகள் சிறுபான்மையினருக்கு சதவீத அடிப்படையில் நிச்சயம் கிடைக்காது, சில அரசு துறைகள் தனியார் மயமாக்குதலிருந்து ஒருபோதும் காப்பாற்றப்படமாட்டாது, இயற்கை வளங்களை சுரண்டும் கார்பரேட் தமிழகத்தை விட்டு வெளியேற மாட்டார்கள், EB BILL, GAS, PETROL, தனியார் பள்ளி கட்டணம் போன்ற விலைவாசி குறையாது...
ஆனாலும் நாம் நம்பலாம் இஸ்லாமியர்கள், தலித்கள், கிறிஸ்தவர்கள், சிறுபான்மை மக்கள் இந்த மதவெறி பிடித்த பாசிச கும்பலிடம் இருந்து திமுக ஆட்சியில் ஓரளவு விடுதலை அடைவர். நிம்மதியாக இருப்பர்..
அதற்காகவாவது.. ஒரு சாரார் எப்பொழுதும் போல அதிகமாக திமுக விற்கு வாக்களியுங்கள்....அதே சமயத்தில் பிற கட்சிகளுக்கு வாக்களிக்கவிருக்கும் இன்னொரு சாரார்.
எதிர்கட்சி அந்தஸ்தில் இருந்து சட்டமன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றம் செய்ய நினைக்கும் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்... மற்ற திடீர் கட்சிகளை இந்த முறை புறந்தள்ளுவோம். அதிமுக பாஜக கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி, ம.நீ.ம கூட்டனி இவர்களை புறக்கணிப்போம்.
அ.ம.மு.க அடுத்த முறையெல்லாம் அதிமுக கூட்டணி இணைப்புடன் ஒரே கட்சியாக மாறிவிடும்..
ம.நீ.மை வந்த பிரித்தாளும் வேலைய கச்சிதமாக முடித்துவிட்டு ஒதுங்கி கொள்ளும்.
அதிமுக கூட்டணியால் தமிழக மக்களுக்கு இனி எந்த பயனும் இல்லை என்பது எதார்த்த உண்மை."