MIT- WORLD Peace University மஹாராஷ்டிரா மாநிலத்தில் 72 பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற முதல் 10 தனியார் பல்கலைக் கழகங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் இங்கு மட்டுமே எம்.ஏ முதுநிலையில் அரசியல் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கான சிறப்பு படிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் வழிகாட்டலில்படி 'இந்திய மாணவர் நாடாளுமன்றம்' என்ற அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கொள்கையும், திறமையும் கொண்ட அரசியல் தலைவர்களை உருவாக்குவதே இதன் நோக்கம். அந்த அடிப்படையில் இந்தியாவின் முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களை கண்டறிந்து இப்பல்கலைக்கழகம் விருதுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது.
இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சட்டசபை புள்ளிவிவர அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டசபை எம்.எல்.ஏ.வுமான, மு.தமிமுன் அன்சாரியை தேர்வு செய்தது.
ஐவரிகோஸ்ட் நாட்டிலிருந்து வந்த ஐக்கிய நாட்டு சபையின் மக்கள் தொகை நிதியகத்தின் பூடான் இயக்குனர் அர்ஜென்டினா மடாவல், சமண மத அறிஞர் ஆச்சார்யா லோகேஷ் ஆகியோர் இணைந்து, அவருக்கு இந்த விருதை வழங்கினர்.
இந்த விருது பெற்ற தமீமுன் அன்சாரிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை - 19.03.2020) 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.