அதிரை பள்ளிகளின் கவனத்திற்கு... மாணவர்களை பள்ளிக்குவர கட்டாயப்படுத்தக் கூடாது

Editorial
0


தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் 56 பேருக்கும், 9 பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிச்செய்யும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தற்பொழுது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே பொது சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பதை உறுதிச் செய்ய வேண்டும். 

மாணவர்களும், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும்  தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் வகுப்பறைகள் தினமும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் அவர்களை வீட்டில் தனிமைபடுத்த வேண்டும்.  ஆசிரியர்களுக்கு அறிகுறி இருந்தால் வேறு யாருடனும் தொடர்புக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். 

ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே அமர வைக்க வேண்டும். வகுப்பறையில் தகுந்த இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு அதிகமாக இருந்தால் இரண்டு பிரிவாக பிரித்து வகுப்புகள் நடத்த வேண்டும். 

மாணவர்களை பள்ளிக்கு வர  கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவர்கள் நேரடி வகுப்பில் கற்பதை விட ஆன்லைனில் வகுப்பில் கலந்துக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆசிரியர்கள் மாணவர்கள் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் சுகாதாரத் துறையால் வழங்கப்படும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் ஏற்கனவே வழங்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...