தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பட்டுக்கோட்டையில் அதிமுக-பாஜக கூட்டணியில் த.மா.கா போட்டியிடுகிறது. அந்த கட்சியின் வேட்பாளராக மூன்று முறை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏவாக இருந்த ரங்கராஜன் நிறுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு வாக்கு சேகரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிராம்பட்டினத்தில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரித்தார். இவரது வருகையை ஒட்டி அதிமுக, பாரதிய ஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தத்தமது கட்சிக் கொடிகளுடன் நின்றனர்.
குறிப்பாக கூட்டத்தை காட்டுவதற்காகவே பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் அதிரை பிரச்சாரக் கூட்டத்தில் திரண்டு நின்றனர். அதுபோல் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களும் முதல்வர் பிரச்சார கூட்டத்தில் காணப்பட்டனர்.
அவர்களுடன் எந்த தயக்கமும் இன்றி அதிரையை சேர்ந்தவர்களும் ஆங்காங்கே நின்றனர். சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்தது தொடங்கி கொரோனாவை இஸ்லாமியர்கள் பரப்பியதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியது, யுஏபிஏ, என்.ஐ.ஏ சட்டங்களை ஆதரித்தது என அனைத்து துரோகங்களையும் இழைத்த முதல்வரின் பிரச்சாரக் கூட்டத்துக்கு செல்வதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது?
கஜா புயல் அதிவேகத்தில் தாக்கியது அதிராம்பட்டினத்தை. ஆனால், பட்டுக்கோட்டை வரை மட்டுமே வந்த முதல்வர், இன்று ஓட்டுக்காக அதிரைக்கு வந்துள்ளார். அவரை வேடிக்கை செல்லும் மக்கள் இதையெல்லாம் மறந்துவிட்டார்களா..? வேடிக்கை பார்ப்பதற்காக சென்றேன் என நீங்கள் சொன்னாலும், அந்த கூட்டத்தை ஆதரவாளர் கூட்டம் என்றே ஊடகங்கள் மக்களிடம் காட்டும். அதிரை மக்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு, இஸ்லாமியர்கள் ஆதரவு என்று சித்தரிக்கப்படும். எனவே மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
This comment has been removed by the author.
ReplyDelete