அதிரைக்கு தனி 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலையம் - டிடிவி தினகரன் அறிவிப்பு
March 22, 2021
0
ஒரத்தநாட்டில் நடைபெற்ற அமமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் அதிராம்பட்டினத்தில் தனி தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும், அதிரைக்கு என தனி 108 ஆம்புலன்ஸ் சேவை கொண்டு வரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். அதுபோல் பட்டுக்கோட்டை தொகுதியில் தென்னை பொருள் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.