அதிரை இளைஞர்கள் கைதை கண்டித்து நடைபெற இருந்த போராட்டம் வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு

Editorial
0


 அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் கடந்த சில நாட்களுக்கு ரேசன் கடை ஊழியர் மரணம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு கடற்கரைத் தெருவை சேர்ந்த இளைஞர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் வீடு புகுந்து கைது செய்துள்ளனர்.

பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட காவலர்கள் விட்டின் கதவை உடைத்து இளைஞர்களை கைது செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தப்படும் என அனைத்து ஜமாத், இயக்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை காவல் அதிகாரிகள் நேரில் சந்தித்து இனி இதுபோன்று நடக்காது என்றும், ஜமாத் அனுமதியில்லாமல் இரவு நேர கைது நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என்றும் உறுதி அளித்தனர். அதன்  அடிப்படையில் போராட்டத்தை வெள்ளிக்கிழமை (மறுபேச்சுவார்த்தைக்கு பிறகு) ஒத்தி வைப்பதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...