அதிரையில் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் தொடக்க விழா

Editorial
0

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்  (TNPSC), ரயில்வே (RRB), காவலர் தேர்வு (SSC) உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்றுவிக்கும் விதமாக அதிரையில் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் எனும் பெயரில் பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. 

இதன் தொடக்க விழா நேற்று 27-2-2021 மாலை 4:30 மணிக்கு அதிரை ஏ.எல்.எம் பள்ளியில் நடைபெற்றது. அசாருத்தீன் அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த விழாவில், பயிற்சி மைய தலைவர் அப்துல் ரசாக் தலைமை உரையாற்றினார். 

"நமது நோக்கமும் குறிக்கோளும்" என்ற தலைப்பில் பயிற்சி மைய பொருளாளர் நெய்னா முஹம்மதும், "நிறுவனத்தின் தேவையும் அவசியமும்" என்ற தலைப்பில் பயிற்சி மைய துணை தலைவர் ஏ.எம்.ஏ.காதிர் அவர்களும், "அரசுத் தேர்வின் பயன்களும் தேவைகளும்" என்ற தலைப்பில் சென்னை LEAD அகாடமி தலைவர் என்.முஹம்மது அவர்களும் சிறப்புரையாற்றினர்.

இதில் அதிரையை சேர்ந்த முக்கியஸ்தர்கள், பெரியோர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.











Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...