தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகள் சார்பில் வேட்பாளர் தேர்வு படலம்அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தஞ்சையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பட்டுக்கோட்டைக்கு யார் யார்வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக திமுக பல ஆண்டுகளுக்கு பிறகு தமது சட்டமன்ற எண்ணிக்கையை பட்டுக்கோட்டையில் துவங்க காத்துஇருக்கிறது. திமுகவை பொறுத்தமட்டில் கா.அண்ணாதுரை போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி பட்டுக்கோட்டை தொகுதியை கைப்பற்றிட துடித்துகொண்டு இருக்கிறது.
அப்படி காங்கிரஸ் போட்டியிட்டால் சென்றமுறை போட்டியிட்டு தோல்வியடைந்த மகேந்திரன் மீண்டும் நிறுத்தப்படலாம் என்றுபேசப்படுகிறது. ஆனால், கடந்த முறை மகேந்திரன் தோல்வியை தழுவிய பல ஆண்டுகளுக்கு பின் அதிமுக வசம்பட்டுக்கோட்டை சென்றதால் அவர் நிறுத்தப்படுவாரா? பட்டுக்கோட்டையை காங்கிரசின் தி.மு.க வழங்குமா என்பதுசந்தேகமே..!
இது ஒரு புறம் இருக்க ஆளும் அதிமுகவோ தற்போது சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ள சி.வி.சேகரை களமிறக்குவதா அல்லதுகூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கலா என்று யோசித்து வருகிறது.
இன்னும் சில தினங்களில் அனைத்து கட்சிகளின் நிலையும் தெரிந்து விடும். மேலும் மூன்று முறை வெற்றி பெற்ற ரெங்கராஜன்அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களால் சொல்லப்படுகிறது.
ஆக்கம்: முபீன்
குறிப்பு: கட்டுரையாளரின் பதிவை திருத்தங்களுடன் அதிரை பிறை வெளியிடுகிறது.