அதிரையில் பாதாள சாக்கடை திட்டம் வேண்டும்... திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் முன்னாள் சேர்மன் அஸ்லம் கோரிக்கை

Editorial
0
2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில், அதிரையிலிருந்து தி.மு.க. சார்பில் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மேலத்தெரு ஜமாஅத் தலைவர் P.M.K.தாஜுதீன், அனைத்து முஹல்லா தலைவர் M.அபூபக்கர், அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.ஹெச்.அஸ்லம் உள்ளிட்டோர் ஊருக்கு நலத்திட்டங்கள் வேண்டி மனு கொடுத்தனர்.

அதன்படி அதிரை முன்னாள் சேர்மன் அஸ்லம் அவர்களும் தனது நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் தி.மு.க. முதன்மை செயலாளரும் கருத்துக் கேட்புக் குழு மற்றும் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோரிடம் மனுக்களை வழங்கினார். அதில், "அதிராம்பட்டினம் பேரூர் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான பாதாள சாக்கடைத் திட்டத்தை கொண்டு வரவும், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காலிக்காடு கிராமம் மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டுலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை பம்பிங் மூலம் அதிராம்பட்டினம், தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை, நடுவிக்காடு, மிலாரிக்காடு ஆகிய கிராமங்களின் விவசாயத்திற்கும், நீர் நிலைகளை நிரப்புவதற்காகவும், இப்பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...