அதிரையில் அலைகடலென திரண்ட மக்கள்... பாபர் மசூதிக்காக விண்ணை முட்டும் முழக்கம்!

Editorial
0
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பைசாபாத்தில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டு தலமான பாபர் மசூதியை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., சிவசேனை உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாத கும்பல் தகர்த்தது.

எப்படியாவது நிலத்தை மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை, இஸ்லாமிய அமைப்புகள் ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு பாபர் மசூதி இருந்த நிலத்தை உரிமையாளர்களான இஸ்லாமியர்களுக்கு வழங்காமல் ராமர் கோவில் கட்டுவதற்காக வழங்கியது.

அதனை தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு, வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி போன்றோரை லக்னோ உயர்நீதிமன்றம் நிரபராதி என அறிவித்தது. இவ்விரண்டு தீர்ப்புகளும் சட்டப்படி நியாயமாக வழங்கப்படவில்லை என சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

இன்று டிசம்பர் 6ம் தேதியுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றளவும் நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ள இஸ்லாமியர்கள், தங்களுக்கு நீதி திருத்தி எழுதப்படும் என்ற நம்பிக்கையில் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அந்த வகையில், அதிராம்பட்டினத்தில் இன்று சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) சார்பில் பேருந்து நிலையத்தில் மாலை 4:30 மணியளவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் M. முஹமது ரஹீஸ் வரவேற்புரை ஆற்றினார்.

 SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N. முஹமது புஹாரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் J. ஜெரோன் குமார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் A. முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் பல அரசியல்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு பகுதியாக தஞ்சாவூர் & திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு  மாவட்டத் தலைவர் மல்லிப்பட்டினம் நாகூர் கனி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் மல்லிபட்டினம் பசீர் அஹமத் மற்றும் தேசிய மனித உரிமை கவுன்சில் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் மல்லிப்பட்டினம் அசன் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் L.முகமது அஸ்கர் நன்றியுரை ஆற்றினார்.

இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் கலந்துகொண்டு பாசிச பாஜகவுக்கு எதிராக வலுவான குரலை பதிவு செய்தனர். 
தகர்க்கப்பட்ட மசூதியை அதே இடத்தில் கட்டவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் முழக்கமிட்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...