தண்ணீர் செல்கின்றது.
தற்பொழுது பம்பிங் முறையில் குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கின்றது.
அனால், இந்த CMP வாய்க்கால் பல வருடங்களாக அரசால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் நீர் செல்லும் பாதை குப்பைகளாலும் கழிவுநீராலும் நிரம்பி பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது.
எனவே துரிதமாக வாய்க்காலை தூர்வாரி இருபுறமும் கரை மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுகன்யா அவர்களிடம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் நேரில் சென்று மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்டு அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்ற வாரம் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் CMP லைன் பகுதியில் தெருவின் இரு புறமும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தர வேண்டி நமது சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது. அதேபோல் சி.எம்.பி வாய்காலில் குப்பை சம்பந்தமாகவும் மனு கொடுக்கப்பட்டு உள்ளது
குறிப்பிடத்தக்கது.