அதிரையின் அறிவிக்கப்படாத குப்பை கிடங்காக செயல்படும் சி.எம்.பி. லேன்..!

Editorial
0
அதிரையின் குப்பை மண்டலமாக சி.எம்.பி. லேன் பகுதி மாறி வருகிறது. ஆண்டாண்டு காலமாக சி.எம்.பி. வாய்காலை ஒட்டியுள்ள இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. சி.எம்.பி. லேன் மட்டுமின்றி வேறு தெருக்களை சேர்ந்த மக்களும் இங்கு குப்பைகளை கொட்டிச் செல்வதால் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.
பொதுமக்கள் பொறுப்பின்றி குப்பைகளை அங்கும் இங்கும் வீசிச்செல்வதால் சாலையில் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன. இதன் காரணமாக சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அப்பகுதியில் இரும்பு குப்பைத் தொட்டி வைக்கப்பட்டது. அதில் நிரம்பும் குப்பைகளையும் பேரூராட்சி நிர்வாகம் நேரத்துக்கு அள்ளாத காரணத்தால் குப்பைகள் நிரம்பி மீண்டும் சாலைகளில் கிடக்கின்றன.

குப்பைத் தொட்டியில் கிடக்கும் அசைவங்களை காகங்கள், அருவருப்பான கழிவுகளை அருகில் உள்ள தங்கள் வீடுகளில் போட்டுச் செல்வதாக வேதனைப்படுகின்றனர் அப்பகுதி வாசிகள். போதாக்குறைக்கு நேற்று குப்பைத் தொட்டியை சிலர் கொளுத்திவிட்டுச் சென்றதாகவும், இதனால் இரவு குப்பை தொட்டி எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே இடத்தில் உணவு, விலங்கு, காய்கறி, பிளாஸ்டிக், மருத்துவம், எலெக்ட்ரானிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. பல நாட்களாக சேர்ந்து கிடக்கும் இந்த குப்பைகள் எரியும்போது அதிலிருந்து விஷவாயு வெளியேறும் வாய்ப்புகள் அதிகம். இதனால் அப்பகுதி மக்கள் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளாகலாம். 

ஏற்கனவே வந்த கொரோனாவையே கட்டுப்படுத்த முடியாமல் நாம் போராடிக் கொண்டிருக்கும் புதிய நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பை போல் உள்ளது பேரூராட்சியின் அலட்சியப் போக்கு. பேரூராட்சி நிர்வாகம் உரிய கவனம் எடுத்து இப்பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனையை தீர்த்து அப்பகுதியின் குப்பை மேட்டை அகற்ற வேண்டும். டெங்கு பரவல் காலம் தொடங்க இருக்கும் நிலையில், பேரூராட்சி துரித நடவடிக்கையாக இதை மேற்கொள்ள வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...