கடந்த 6.9.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் துணை தலைவர் பி.எம்.கே. தாஜுதீன் அவர்கள் தலைமையில் அதிரை சாரா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், கட்டுமான சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம தலைவர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பொருப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது:
1.அதிரையில் மணல் விலை அதிகமாக இருப்பதால் கட்டுமான தொழில் பாதிக்க படுவதினாலும், ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வசதி உடையவர்கள் தாங்கள் தொடங்கிய கட்டுமானத்தை முடிக்க முடியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு இது சம்பந்தமாக மாட்டு வண்டி மூலம் மணல் தொழில் செய்பவர்களை
அடுத்த அனைத்து முஹல்லா கூட்டத்திற்கு அழைத்து பேசி சரியான விலை நிர்ணயம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
2.இது சம்பந்தமாக மணல் தொழில் செய்பவர்களை அணுகி அவர்களுக்கு அழைப்பு விடுக்க அந்தந்த கிராமங்களின் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
3.அனைத்து முஹல்லாவின் அடுத்த கூட்டம்பற்றிய அறிவிப்பு
மணல் வண்டி தொழில் செய்பவர்களுடன் கலந்து கொண்டு பின்னர் அறிவிக்கப்படும்.