அதிரை மேலத்தெருவில் 1929 ம் ஆண்டு திண்ணையில் வைத்து தொடங்கப்பட்டது சூனா வீட்டு பள்ளி. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 100-ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பாரம்பரிய மிக்க இந்த பள்ளியில் நமதூரை சேர்ந்த பலர் கல்வி பயின்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள்.
இப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை நாளடைவில் குறைந்து கொண்டே சென்றதால் இதனை கருத்தில் கொண்ட SDPI-கட்சியின் மேலத்தெரு கிளை இளைஞர்களும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களும் சேர்ந்து ஆலோசனை செய்து கீழ்கண்ட தீர்மானங்களை எடுத்து ஒவ்வொன்றாக செயல்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனைகளை செய்து பள்ளியின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கைக்கு பிரச்சாரம் செய்யவும், மாணவர் சேர்க்கையின் மற்றொரு அங்கமாக விளம்பர பதாகை வைக்கவும், பள்ளியின் உட்புறம், வெளிபுறம், வகுப்பரைகளை தூய்மை படுத்துதல் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்யவும், LKG, UKG வகுப்புகளை துவங்குவதற்கு முயற்சி எடுக்கவும். பள்ளியின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பள்ளிக்கு பெற்றுத்தரவும் முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.