இக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு:
தீர்மானம் 1:
நமதூரில் சமீபகாலமாக ஆற்று மணல் விற்பனை விலை அதிகரித்துள்ளது. இவ்விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரி, AAMF-ற்கு நமதூர் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், சமுதாய இயக்கத்தினர் உள்ளிட்ட பலரிடம் கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை பரிசீலித்த AAMF நிர்வாகம், நமதூரில் நடைபெற்று வருகிற கட்டுமான பணிகளை ஒரு குறிப்பிட்ட காலம் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2:
மேற்காணும் முடிவை செயல்படுத்த வருகிற 01.09.2020 செவ்வாய் கிழமை அன்று காலை 11:00 மணியளவில், நமதூரில் உள்ள கட்டுமான பணியாளர்கள் சங்கம், அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கத்தினர், சமூக ஆர்வலர்கள், அருகாமை கிராம தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் AAMF-ன் சார்பாக நடத்தி இறுதி முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
தகவல்:
AAMF நிர்வாகம்.
மாஷா அல்லாஹ் மிகவும்
ReplyDeleteசிறப்பான முடிவு உங்கள் முயற்சியில் அல்லாஹ் வெற்றியை தருவானாக
ஆமீன்