அதிரை ரயில் நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்தால் கடும் நடவடிக்கை

Editorial
0
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை அமைக்கப்படும் பணி பல ஆண்டுகால கோரிக்கைக்கு பிறகு தொடங்கி நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளான ஜூன் 1-ம் தேதி முதல் அதிரை வழியாக திருவாரூர் - காரைக்குடி இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. விரைவில் சென்னைக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.


இதனால் அதிரை ரயில் நிலையத்தில்  அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செய்யவும் காற்றுவாங்கவும் பலர் சென்று வருகின்றனர். அத்துடன் இரவு நேரத்தில் குடிமக்கள் நடமாட்டம் குறைந்து குடிகாரர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 

மக்கள் பயன்படுத்தும் ரயில் நிலைய தன்ணீர் குழாய் வாஷ் பேசன்களில் குடிமகன்கள் பாக்கு போட்டு துப்பிய கரை படிந்து அசுத்தமாக காணப்பட்டது. ரயில் நிலையத்தில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் உடைந்த நிலையிலும், முழுமையாகவும் கிடக்கின்றன.

இதுகுறித்து அதிரை பிறையிலும் முன்பே செய்தி வெளியிட்டு இருந்தோம்:



இந்த நிலையில், ரயில் நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரை ரயில்வே நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ள கடற்கரைத் தெரு ஜமாத், தெருவாசிகள், பெண்கள், குழந்தைகளுடன் ரயில்நிலையத்துக்கு செல்லக்கூடாது என்றும், மீறி சென்று பிடிபட்டால் ஜமாத் தலையிடாது என்றும் எச்சரித்துள்ளது.

ரயில்நிலையத்தின் தற்போதைய பரிதாப நிலை...

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...