இதுகுறித்து அதிரையை சேர்ந்த மருத்துவர் முஹம்மது ஆரிஃப் M.D. நமது அதிரை பிறையிடம் தெரிவிக்கையில் "இந்த சூழலில் காய்ச்சல், உடல் வலிக்கு ஊசி போட்டுக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல. இதய நோயாளிகள், சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள் இதுபோன்ற ஊசிகளை போட்டு கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு வேளை கொரொனோ வைரஸ் தொற்று இருந்தால் இந்த ஊசி வைரசின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும். இதனால் அவர்கள் உடல்நிலை மிகவும் மோசமடையக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
எனவே நோயாளிகள் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை முறையாக பின்பற்றாமல் உடனடி நிவாரணத்துக்காக இதுபோன்ற ஊசிகளை நோயாளிகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.