கொரோனா எதிர்ப்பு மருந்து - அன்றே சொன்ன அதிரை இளம் மருத்துவர்

Editorial
0
கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், சிகிச்சை வழங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற ஹோமியோபதி மருந்தை தற்போது பலர் பரிந்துரைத்து வருகின்றனர். அதிரை பைத்துல்மால் சார்பால் நாளை முதல் இந்த மருந்தை அனைவருக்கும் வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

அதை மட்டுமின்றி பல ஊர்களில் கட்சிகள், இயக்கங்கள் மக்களுக்கு இதை வழங்கி வருகின்றனர். அதே போல் அலுவலங்களுக்கு வரும் பணியாளர்களுக்கும் நிறுவனங்கள் இந்த மருந்தை வழங்கி வருகின்றன. இந்த மருந்து நல்ல பயன் தருவதாகவும் பலர் தெரிவித்து வருவதை அடுத்து அதிரை பைத்துல்மாலும் இந்த நல்ல முயற்சியை மேற்கொண்டு உள்ளது.

இந்த மருந்தை பயன்படுத்தும்படி, கடந்த ஏப்ரல் 23 ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த மருந்து பற்றி யாருக்கும் தெரியாத போதே நமதூர் மக்களுக்கு பரிந்துரைத்தவர் அதிரையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான அஹமது முகைதீன். 

தனது வீட்டில் மருத்துவ ஆலோசனைக்காக வருபவர்களுக்கு இந்த மருந்தை வழங்கி வந்ததுடன், அனைத்து மக்களும் இதை உட்கொண்டால் நல்ல பலனளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து ரமலான் மாதத்தில் நமது அதிரை பிறையிலும் செய்தி வெளியிட்டோம். பார்க்க: https://www.adiraipirai.com/2020/05/blog-post_69.html 

அன்று அவர் பரிந்துரைத்த மருந்து இன்று எல்லோராலும் நம்பிக்கைக்குறியதாக பேசப்படுகிறது. இன்று பைத்துல்மால் சிறப்பான முயற்சியை கையில் எடுத்துள்ளது பாராட்டிற்குறியது.

இந்த மருந்தை உட்கொள்வது குறித்தோ, அல்லது வேறு காரணங்களுக்காக மருத்துவர் முகைதீனிடம் மருத்துவ ஆலோசனை பெற விரும்புபவர்கள், அவரது தொலைப்பேசியில் முன்பதிவு செய்துவிட்டு சி.எம்.பி லேனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அனுகலாம். 

தொடர்பு எண்: +91 73580 51252

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...