-file image
இந்த நிலையில், மற்ற அவசர மருத்துவ தேவைகள், விபத்துகளுக்கு தமுமுக ஆம்புலன்ஸ் இயக்கப்படுமா என்ற கேள்வியும் சந்தேகமும் மக்களிடையே எழுந்தது. இது தொடர்பாக அதிரை தமுமுகவை சேர்ந்த உறப்பினரிடம் அதிரை பிறை சார்பாக வினவினோம்.
அதற்கு பதிலளித்த அவர், "தற்போது பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் பட்டுக்கோட்டையில் இயங்கி வந்தது. பட்டுக்கோட்டையில் ஏற்கனவே அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் இயங்கி வருவதால், அதிராம்பட்டினத்துக்கு கொரோனா அவசர சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்சை வழங்குமாறு எங்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். எனவே பட்டுக்கோட்டை ஆம்புலன்ஸை அதிரையின் கொரோனா அவசர சிகிச்சைக்காக வழங்கியுள்ளோம். ஏற்கனவே நமதூரில் இயக்கப்பட்டு வரும் பெரிய ஆம்புலன்ஸ் மற்ற மருத்துவ அவசர உதவிகளுக்காகவும் பயன்படுத்தப்படும்" என்றார்.
ஆம்புலன்ஸ் எண்: 9750505094