இந்த நிலையில், இன்று மாலை அதிரையில் ரயில் தண்டவாளத்தை மாடுகள் கடந்து சென்றுகொண்டிருந்தன. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சர்விஸ் ரயில் எஞ்சின் பெட்டி தண்டவாளத்தை கடக்க முயன்ற கன்றுக்குட்டியின் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கன்றுகுட்டி உயிரிழந்தது.
உயிரிழந்த கன்றுகுட்டியை அத்துடன் வந்த மற்ற மாடுகள் சுற்றி நின்று எழுப்ப முயன்றது காண்போரை கலங்க வைத்தது. கன்றின் உரிமையாளர் யார் என்று தெரியாததால் தண்டவாளத்தில் இருந்து உடல் அகற்றப்படவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கு காரணமாக ரயில்நிலைய பணியாளர்கள் அதிகளவில் பணிக்கு வருவதில்லை. எனவே அவ்வழியாக செல்லும் கால்நடைகளை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கால்நடை உரிமையாளர்கள் ரயில் நிலைய வட்டாரத்தில் மேய்ச்சலுக்கு விடாமல் தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளவும்.