அதிரை இமாம் ஷாபி பள்ளி ஹிஃப்ழ் அகாடமியில் குர்ஆன் மனனம் செய்த 8-ம் வகுப்பு மாணவர் ஜாபிர்

Editorial
0
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் 2018 ம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் நாள் அன்று துவங்கப்பட்ட ஹிஃப்ழ் அகாடமியில், மாணவர்கள் பள்ளியில் பயின்றுக் கொண்டே குர்ஆனை துரிதமாக மனனமும் செய்து வருகிறார்கள். 

இதில் இரண்டாவது ஹாஃபிழாக எட்டாம் வகுப்பு மாணவர், ஜனாப் அக்பர் அலி அவர்களின் மகன் ஜாபிர் அவ‌ர்க‌ள் தேர்ச்சி பெற்றுள்ளார். அல்ஹம்துலில்லாஹ். 

இவர் ஹிஃப்ழ் அகாடமி துவங்கிய ஜூலை 21 2018, அன்று பாடம் துவங்கி, சரியாக (இன்று) ஜூலை 21 2020 இரண்டு வருடங்களில் முழுமையாக குர்ஆன் மனனம் செய்து முடித்துள்ளார்.

மார்க்க அறிஞர்களும், பள்ளியின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் இவரை வாழ்த்தினர். நிலைமைகள் சீர்பெற்று பள்ளி திறந்த பின்,  ஹிஃப்ழ் முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று பள்ளி சார்பாக பொருளாளர். ஹாஜி ஜனாப். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் கூறினார்கள். 

இந்த இக்கட்டான சூழலிலும் ஆசிரியர் ஹாஃபிழ். அபூபக்ர் அவர்கள் மாணவர்களின் பாடங்களை கைபேசியில் கேட்டு, பாடத்தில் தோய்வு  ஏற்படா வண்ணம் முயற்சிகள் மேற்கொண்டது பாராட்டுக்குரியது. அவரது முயற்சிகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!  

வரும் கல்வியாண்டில் மாணவிகளுக்கும் ஹிஃப்ழ் வகுப்புகள் நடைபெறும், இன்ஷா அல்லாஹ்.  தற்போது முபல்லிகா, முஅல்லமா பாட திட்டம் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு துவக்கப்பட்டு சிறப்பாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.
 
ஒரு மாணவரின் வெற்றியானது, பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சி, ஆசிரியரின் ஈடுபாடு, மாணவரின் கடின உழைப்பு மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு சார்ந்து இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் ஆகும். மென்மேலும் மாணவ மணிகளின் இம்மை மற்றும் மறுமையின் வெற்றிச் சேவையை சிறப்பாக தொடர துஆ செய்யுங்கள். 

இப்படிக்கு 
பள்ளி நிர்வாகம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி 
அதிராம்பட்டினம்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...