அதிரையில் நாளை காலை 7 முதல் 7:30 மணி வரை ஹஜ் பெருநாள் தொழுகை

Editorial
0
இன்று 31.07.2020 அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம், கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளியில் மாலை 7:30 மணியளவில், கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி கமிட்டித் தலைவர். ஜனாப். VMA. அஹமது ஹாஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து முஹல்லா தலைவர்கள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க கீழ்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1:

இன்ஷா அல்லாஹ் நாளை (01.08.2020) நடைபெற உள்ள ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நமதூர் பள்ளிகளில் காலை 7:00 மணி முதல் 7:30 மணிக்குள்  நடத்திக் கொள்வது என்றும், தமிழக அரசின் வழிகாட்டுதலை பேணி அதாவது சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து, குறைந்த எண்ணிக்கையில் மக்களை அனுமதித்து தொழுகை நடத்திக் கொள்ள அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் AAMF கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2:

நமதூர் பள்ளிகளுக்கு வருகை தரும் மக்களை வீடுகளிலேயே உளூ செய்து வருவதற்கும், வரும்போது ஒவ்வொரும் சொந்தமாக முஸல்லா எடுத்து வர கேட்டுக் கொள்ள ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் AAMF கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3:

நாளை (01.08.2020) முதல் ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்து நேர தொழுகைகளை குறைந்த மக்களை கொண்டு நடத்திக் கொள்வது என்றும், ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் கிரிமி நாசினி பயன்படுத்துதற்கும், சமூக இடைவெளி பேணப்படுவதற்கும், முககவசம் அணிந்து வருவதையும் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும் என ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் AAMF கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4:

கண்டிப்பாக காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் நிலை சரியில்லாதவர்களை அவரவர் வீடுகளிலேயே தொழுதுக் கொள்ள கேட்டுக் கொள்ள அனைத்துப் பள்ளி நிர்வாகிகளையும் AAMF கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5:

பள்ளிக் தொழவரக் கூடியவர்கள் கண்டிப்பாக போட்டோ, வீடியோ எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும், தொழுகைக்கு வரும் பொது மக்களை போட்டோ, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களி பதிவிட வேண்டாமென கேட்டுக் கொள்ள வலியுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகிகளையும் AAMF கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு, 
நிர்வாகம்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு
அதிராம்பட்டினம்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...