அரசு 3 அடி ஆழத்துக்கு விவசாய தேவைக்காக வண்டல் மண் மட்டுமே அள்ள சொல்லி இருக்கும் சுமார் 6 அடிக்கு மண்ணை எடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து இன்று காலை அதிரை பிறையில் செய்தி வெளியிட்டோம்.
இதனை தொடர்ந்து கரிசல்மணி ஏரிக்கு அதிரை SDPI கட்சியினர் சென்று பார்த்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியது தெரியவந்தது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது இன்றுடன் ஒப்பந்தநாள் முடிவடைவதாகவும் பணிகளை நிறுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தார்.