அதிரை வழக்கறிஞர் முஹம்மது தம்பிக்கு கொலை மிரட்டல் - PFI புகார்

Editorial
0
இதுகுறித்து பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர தலைவர் முஹம்மத் ஜாவித் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அதிரையை சேர்ந்த முஹம்மது தம்பி. இவர் பாப்புலர் ஃப்ரண்டின் நகர செயற்குழு உறுப்பினர் ஆவார்.இவர் பல ஆண்டுகளாக அதிரையில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகளில் இவரின் பங்களிப்பு சிறப்பானது.

சுகாதாரத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் பல இடங்களில் இவரின் சேவைக்காக பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

இவரின் வளர்ச்சியைப் பிடிக்காத ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி காரர்கள் அரசியல் ஆதாயத்திற்காக நேரடியாக கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு சென்றுள்ளனர்.

அதிரையை சேர்ந்த அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகி அஜீஸ் என்பவர் நேரடியாக இவரிடம் "நீ முஹல்லாவுடன் சேர்ந்து செய்யும் பணிகளை நிறுத்த வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்" என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்காக தி.மு.க வை சேர்ந்த முன்னாள் சேர்மனும் எங்களுடன் உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

இதை பாப்புலர் ஃப்ரண்ட் வண்மையாக கண்டிப்பதுடன் மேலும் அதிமுக மாவட்ட நிர்வாகம் இது விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்கின்றோம்." என தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அப்துல் அஜீஸ் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதுபோல் தான் எந்த மிரட்டலும் விடுக்கவில்லை என மறுத்து உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...