கொரோனா ஊரடங்கு காலத்தில் பலர் வருமானம் இழந்துள்ள நிலையில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் கேட்டு தொல்லை செய்வதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கல்விக்கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள் பற்றி தங்களிடம் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் "திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கட்டாயமாக கல்வி கட்டணம் வசூலித்தால் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.
கொரோனா ஊரடங்கில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் கல்வி கட்டணம் வசூலிப்பது என்பது மனிதாபிமானமற்ற செயல்.
மக்கள் சரியான நிலைக்கு திரும்பும் வரை எந்த கல்வி கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என கல்வி நிறுவனங்களுக்கு கேட்டுக் கொள்கிறோம். எனவே எந்த பள்ளியாவது கல்வி கட்டணம் வசூலித்தால் உடனடியாக கேம்பஸ் ஃப்ரண்ட் -ற்கு புகார் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்கிறோம்." என குறிப்பிட்டு புகார் தெரிவிப்பதற்கான எண்களை அறிவித்து உள்ளனர்.
1. அ.சர்வத் ரஃபீக்
செல்;- 9087174279
2. நஜீப் அஹமது
செல்;- 6381726393
3.முஹமது ஜூபைர்
செல்;- 8489152193
4.முஹமது நளீம்
செல்;- 9965726319
இப்படிக்கு.
அ.சர்வத் ரஃபீக்
மாவட்ட தலைவர்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டம்