அதிரை அஹ்மத் அவர்களின் மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்த எழுத்தாளர்கள்..! (வீடியோ)

Editorial
1

அதிரை அஹ்மத். தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர். தமிழ், இஸ்லாம், வரலாறு, கவிதைகள் சார்ந்த பல பிரபலமான புத்தகங்களை எழுதி உள்ளார். அதிரை நிருபர் தளத்தில் தொடர் கட்டுரைகள், கவிதைகளை எழுதி வந்ததுடன், அதிரையின் வரலாற்று தகவல்களையும், தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று தகவல்களையும் திரட்டுவதில் முழு மூச்சாக செயல்பட்டு வந்தார். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முழு நீள வரலாற்றை அலசும் தமிழ் புத்தககங்களில் அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய புத்தகம் மிக முக்கியமானதாக உலமாக்களாலும், வரலாற்று அறிஞர்களாலும் பார்க்கப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிரை அஹமத் அவர்களுக்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெற்றபின் தனது முகநூல் கணக்கில் 'நான் தமிழ்மாமணி'யா! என்ற பெயரில் தொடரை எழுதி வந்தார். அதில் தன் வாழ்க்கை குறிப்பு மற்றும் தமிழ் மேல் தனக்கு ஏற்பட்ட ஆர்வம், தனது தமிழ் தொண்டு பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

நமது அதிரை பிறை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஊக்கமும் உத்வேகமும் அளித்து வந்தவர். எந்த சடைப்பும் இன்றி நமது எழுத்துப் பிழைகள், கருத்துப்பிழைகள், இலக்கண பிழைகளை சுட்டிக்காட்டி நமக்கு ஒரு ஆசானாக இருந்தவர். அதிரையில் வளர்ந்து வரும் இளம் பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வந்தவர். தனது தமிழ் அறிவையும் மார்க்க அறிவையும் அடுத்த தலைமுறைக்கும் கடத்த அரும்பாடுபட்டவர்.

 எந்த சமரசமும் இன்றி தனது கருத்தை முன்வைக்கக் கூடிய எழுத்தாளர். அதிரையின், தமிழின் மிகச்சிறந்த ஆளுமை. இஸ்லாத்திற்குள் ஊடுருவிய பித்அத்தான மூட நம்பிக்கைகளை எதிர்த்து தைரியமாக கருத்துக்களை முன் வைத்த தவ்ஹீத்வாதி. அன்னார் கடந்த மே 30-ம் தேதி வஃபாத்தானார்கள்.

அவர்கள் பற்றியும், அன்னார் தமிழுக்கும், இஸ்லாத்துக்கும் ஆற்றிய சேவை பற்றியும் எழுத்தாளர்கள் வீடியோ மூலம் நினைவுகூர்ந்துள்ளனர். அதிரை அஹ்மத் அவர்கள் தொடர்ந்து தனது முத்தான கட்டுரை எழுதி வந்த அதிரை நிருபர் தளம் தொகுத்து வெளியிட்டு உள்ளது.

Post a Comment

1Comments
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...