இது சாதாரண வெடி சத்தமாகவோ, கட்டிடம் இடியும் சத்தமாக இருந்தால் இத்தனை பரப்பளவுக்கு கேட்டிருக்காது. சூப்பர்சோனிக் ஜெட் விமானம் அண்மை காலங்களில் வான் பரப்பில் செல்வதை காண முடிகிறது. அதன் வேகத்தை கூட்டும்போது இந்த சத்தம் வரலாம் என்ற வீடியோ ஒன்றை சிலர் பகிர்ந்து வருகின்றனர். விரைவில் சத்தத்துக்கான உண்மை காரணம் வெளிவரும்.
இதுகுறித்து தெரிவித்துள்ள டெல்டா வெதர்மேன், "சற்று முன்பு பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் பகுதிகளில் பயங்கர சத்தம் இடி போன்று கேட்டது. முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, எடையூர், உதயமார்த்தாண்டபுரம் பகுதியிலும் லேசான சத்தம் உணரப்பட்டது. இச்சத்தம் குறித்து அச்சப்பட வேண்டாம்.
வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஒலியின் வேகத்தை விட வேகமாக பயணிக்கும் விமானமோ, பொருள் காரணமாக ஏற்படும் அலையை தூண்டும் அதித சத்ததை சோனிக் பாம் என்போம். இச்சத்தம் பெரிய பேரிடர், இடி போன்று இருக்கும். எங்கும் பூமியில் பாதிப்பை ஏற்படுத்தாது." என்றார்.