அதிரை ரேசன் கடைகளில் ஏமாற்றப்படும் மக்கள்... எடைபோடுவதில் மோசடி

Editorial
0

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் அத்தியாவசிய உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரையில் உள்ள ரேசன் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவு பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். இதனை வாங்க அதிரை செக்கடி மேட்டில் உள்ள ரேசன் கடைக்கு ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது டிஜிட்டல் கருவியில் வாடிக்கையாளர் பார்க்கும் மீட்டர் எடை போடுபவரின் பக்கம் திருப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எடையை பார்க்காமல் மக்கள் பொருட்களை  வாங்கிச் சென்றனர். சந்தேகமடைந்த அந்த நபர் ஓரமாக எடைபோடுபவர் பக்கம் சென்று டிஜிட்டல் மீட்டரை எட்டிப்பார்த்துள்ளார். அப்போது 20 கிலோவுக்கு பதில் 18 கிலோ அரசி எடை போடப்பட்டதை கண்ட அந்த நபர் அந்த இடத்திலேயே கண்டித்துள்ளார். உடனே குறைக்கப்பட்ட 2 கிலோ அரிசியை சேர்த்து வாடிக்கையாளரிடம் வழங்கியுள்ளனர்.

இதுபோன்ற மோசடி தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் தொடர்ந்து வருகிறது. டிஜிட்டல்கள் எடை இயந்திரஙகளில் 2 மீட்டர்கள் இருக்கும். கீழே உள்ள மீட்டர் எடையாளர் பார்ப்பதற்கும் மேலே உள்ள மீட்டர் வாடிக்கையாளர் பார்ப்பதற்கும் உள்ளது. ஆனால், அதையும் தங்கள் பக்கம் திருப்பி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இனி ரேசன் பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் சுதாரித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...