குறிப்பிட்ட ஆழத்துக்கு அதிகமாக ஏரியை தூர்வாரும் போது அதன் தன்மை பாதிக்கப்படுவதுடன் எரியில் நீர் தங்காமல் உடனடியாக உறிஞ்சும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி அதன் மண் வளமும் பாதிக்கப்படும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் கருத்தாக உள்ளது. தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக இதுபோன்று மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
அதிரை கரிசல்மணி ஏரியை மணல் குவாரியாக்கும் மாஃபியாக்கள்... அழிக்கப்படும் மண் வளம்
June 10, 2020
0
தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் படி ஏரி, குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதித்து, தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.22.91 கோடி ஒதுக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அதிரை கரிசல்மனி ஏரியில் கடந்த ஒரு வாரமாக ஏரியில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு 10க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண் அள்ளி வருகிறார்கள். அரசு வண்டல் மண் மட்டுமே அள்ள சொல்லி இருக்கும் நிலையில் அளவுக்கு அதிகமாக ஆழத்தில் மண்ணை எடுத்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.