இந்த தளர்வின் அடிப்படையில் தமிழகம் மண்டலவாரியாக பிரிக்கப்பட்டு உள்ளது. நமது மண்டலத்தை பொறுத்தவரை திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு இவற்றுக்குள் ஈ-பாஸ் இல்லாமல் சென்றுவர அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் இந்த மண்டலத்துக்குள் பயணிக்க 50% பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதிரையில் இன்று முதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு அதிரை வந்த பேருந்துகளை மக்கள் ஆவலுடன் பார்த்தனர். பேருந்து ஓட்டுநர், நடத்துனர் முகக்கவசம் அணிந்துள்ளனர். பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.