தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிறந்த அதிரை அஹ்மத் பேராசிரியராகவும், சுயாதீன பத்திரிக்கையாளராகவும், தமிழறிஞராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் அறியப்பட்டவர்.
மழைப்பாட்டு (உரை), Wisdom in the Dawn (English), இளமைப் பருவத்திலே (Wisdom in the Dawn என்ற நூலின் மொழிபெயர்ப்பு), அரும்புப் பாட்டு (பதிப்பில்), பெண்மணி மாலை (மரபுக் கவிதைகள்), ஒருமைப் பாட்டு (மரபுக் கவிதைகள்), இறையருட்கவிமணி மாலை (மரபுக் கவிதைகள்), நல்ல தமிழ் எழுதுவோம்!, ஈமான் – இஸ்லாம் கவி மலர்கள், நபி (ஸல்) வரலாறு, பேருபெற்ற பெண்மணிகள் உள்ளிட்ட சுமார் 40 புத்தகங்களை எழுதியவர்.
கடந்த 2017-ம் ஆண்டு இவருக்கு தமிழ்மாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அன்னார் இன்று வஃபாத்தானார்கள். அன்னாரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் "அதிரையில் தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களது பணிகளை அங்கீகரித்து உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக!அவர்களது குடும்பத்திற்கு அழகிய பொறுமையை வழங்குவானாக.
ஆமீன்!" என தெரிவித்துள்ளார்.