பகல் நேரத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால் நள்ளிரவு நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அதிரை அருகே இராஜா மடம் ஆற்றில் மணல் வெட்டி மாட்டுவண்டியில் நிரப்பி கீழத்தோட்டம், ஏரிப்புறக்கரை வழியாக குப்பத்தில் இறங்கி கடற்கரைத்தெரு வழியாக நேரடியாகவோ அல்லது ஐ.டி.ஐ. மைதானம் வழியாக ஹாஜா நகர் வந்து கடற்கரைத் தெருவுக்கு கொண்டு வந்து இறக்கப்படுகிறது. அப்படியே பெண்கள் மார்க்கெட் வழியாக சென்று ஆறுமுக கிட்டங்கித்தெரு, தரகர் தெருவுக்கு மணல் கொண்டு சென்று இறக்கப்படுகிறது. இவ்வாறு கடத்தப்படும் ஒரு வண்டி மணல் ₹1,200-க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அதிரையில் ஊரடங்கிலும் ஊரறிய நடக்கும் மணல் கொள்ளை!
May 17, 2020
0
அதிரை சுற்றுவட்டார நீர்நிலைகளில் மணல் கடத்தல் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு மணலை கடத்தி வரும் மாட்டு வண்டிகள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கிடப்பதை பலரும் கண்டிருப்பீர்கள். தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலிலும் அதிரையில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெறுவது தெரியவந்துள்ளது.