உரையாடல்: 1
அவர் : என்னப்பா அங்க ஒரே கூட்டமா இருக்கு எதுவும் நிகழ்ச்சி நடக்குதா.
இவர் : ஆமாம்பா, நம்ம பசங்க ஏதோ நிகழ்ச்சி நடத்துறாங்க.
அவர் : யார் நடத்துறது.
இவர் : யாரோ BCC கட்சியாம்.
அவர்: என்னப்பா இது ஊர்ல பல இயக்கங்கள்/ கட்சிகள் இருக்கு இப்படி எல்லாரு தனித்தனியா போனா என்ன செய்றது. சமூகம் பிரிஞ்சி போச்சி.
உரையாடல் 2
அவர் : என்ன ஒரே கூட்டமா இருக்கு.
இவர் : போராட்டம் நடத்துறாங்க.
அவர் : யாரெல்லா.
இவர் : கட்சி இயக்கங்கள் இணைந்து.
அவர் : ஓஹ். அதான பார்த்தேன். அவங்களுக்கு ஏற்ற கட்சி இயக்க ஆளுங்களா பேச வைக்கிறாங்களோ. அவங்கவங்க கட்சி பலத்த காட்டவே கூட்டம் கூடி இருக்காங்கப்பா.
(எந்த நிகழ்ச்சியிலும் பங்கு பெறாத ஆட்களின் குறை சொல்லியே பழகியவர்கள்)
உரையாடல் 3
அவர் : அந்த கூட்டத்துல நம்மல முன்னிலை படுத்த மாட்டேங்குறாங்களே என்ன செய்யலாம்.
இவர் : நாம அதைவிட பெரிய கொட்டாய போட்டு மக்கள கவர்ந்து நம்ம வையிட்ட காட்டலாம்.
அவர் : எது எப்படியோ நாம தான் இந்த ஊருக்கு எல்லாமா இருக்கனும். இதை வைச்சி சீட்டு வாங்களாம் கட்சியில. (பப்ளிசிட்டி)
இவர் : அதே. (ஜிங் ஜாங்)
உரையாடல் 4
அவர் : நம்ம சமுதாயத்துல ஒற்றுமை இல்ல. இப்படியே போய்ட்டிருந்தா நமக்கான எதிர்காலம் கேள்விக்குறியா போய்ரும்.
இவர் : ஆமாம்பா,
அவர் : எல்லாம் ஒரே அரசியலா இருக்கே .
இவர் : ஆமாம்பா,
அவர் : எதையும் ஒழுங்கா நடத்த தெரியல.
இவர் : ஆமாம்பா.
ஒரு நிகழ்ச்சியையோ/ போராட்டமோ இன்னும் என்னவெல்லாம் இருக்கோ.
அதுல வரக்கூடிய பாசிட்டிவ மட்டும் பார்க்காதீங்க. அதுல இருக்குற கஷ்டங்களையும் பாருங்க. நம்மால முடியலனா ஓரமா போறது சிறந்தது. அதை விட்டுட்டு இது நொட்ட அது நொல்லன்னு சொல்றதெல்லாம் பொறாமையின் முழு வெளிப்பாடு.
இனி வரக்கூடிய காலங்களிலாவது குறை சொல்வதை நிறுத்திவிட்டு சமூகத்திற்கு ஒன்னுனா முன்ன போய் நிற்போம். நமக்கு முன்னாடி யாரு அந்த வேலைய செய்றாங்கன்னா அதில் நமக்கு திருப்தி இருந்தால் அவங்களுக்கு பின்னே போய் நிற்போம். பதவி, பெருமை, அடாவடியெல்லாம் இந்த மண்ணோடு போய்விடும். நமக்கு நல்ல கருத்திருப்பின் சம்பந்தபட்ட நபரிடமோ அவர்கள் சார்ந்த குழுவிடமோ கூறுவது சிறந்ததாக இருக்கும். அதனால் பல குழப்பங்கள் வரவிடாமல் தடுக்க இயலும்.
நம் சமுதாயத்த வெச்சி விளையாடி விட கூடாது. சமூகத்துக்கு முன்னுரிமை கொடுப்போம். மற்றதெல்லாம் பிறகுதான்.
இது நகைச்சுவை கலந்து ஊர் நடப்பை வெளிபடுத்தவே பதியப்பட்டது. யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ கிடையாது. ஒற்றுமையோடு செயல்படுவோம் சகோதரத்துவத்தை பேணி காப்போம்.