அவர் தன் மனுவில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, குஜராத் மாநிலங்களில் இந்த மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் மருந்துக்கு ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்தும் அது அமல்படுத்தப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆர்செனிகம் ஆல்பம் – 30 மருந்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை ஏற்று, அதை பயன்படுத்த தமிழக அரசும் அரசாணை பிறப்பித்து, அமல்படுத்தி வருவதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் இந்த மருந்து கிடைப்பதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
- நியூஸ் 18 செய்தி
இந்த மருந்து அதிரையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் அஹமது முகைதீனிடம் உள்ளது. சி.எம்.பி லேனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் மருத்துவ ஆலோசனை பெற்று இந்த மருந்தை வாங்கிக்கொள்ளலாம்.
தொடர்பு எண்: +91 73580 51252