அதிரையில் ஐஸ் கட்டி மழையா?

Editorial
0
அம்பன் புயல் வலுவடைந்துள்ளதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அதிரையிலும் பலத்த காற்றுடன் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அதிரை கடற்கரைத் தெருவில் ஐஸ் கட்டி மழை பெய்து வருவதாக 7 வினாடி வீடியோவுடன் ஒரு பதிவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 
10:07-க்கு ஒரு குழுவில் பகிரப்பட்ட இந்த பதிவை பலரும் பல்வேறு குழுக்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் நாம் விசாரித்தபோது அந்த நேரத்தில் அதுபோல் எதுவும் இல்லை என தெரிவிக்கின்றனர். புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பகிரப்படும் ஒவ்வொரு தகவலும் முக்கியமானவை. எனவே உண்மையை நன்கு அறிந்து தகவலை பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...