என்ன இல்லை அதிரையில்? எதை நாடுகிறோம் வெளியூரில்?

Editorial
0

தப்லீக்காரர்களின் மீது கொரோனா பழி சுமத்தப்பட்ட போது, அதிரை, முத்துப்பேட்டை, மதுக்கூர் போன்ற நமது வட்டாரப்பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் தீண்டத்தகாதவையாக ஒதுக்கப்பட்டன. 

பால்காரர்கள் பால் தர மறுத்தனர். கொண்டு வந்த பாலை சாலயைில் கொட்டி துவேஷத்துக்கு பாலாபிஷகேம் நடத்தினர். 

மருத்துவமனைகளில் உயிர் போகும் கட்டத்திலும் உள்ளே விட மறுத்தனர். 

வெயிலுக்கு ஒதுங்க வீட்டுத்  திண்ணைகளில் இடம் தர மறுத்து விரட்டினர். 

மீன்காரர்கள் நமது தெருவுக்குள் வர அஞ்சினர். 

தனிமைப்படுத்த பகுதிகளில் முஸ்லிம் பகுதி ஜாக்கிரதை என்று மனசாட்சி இல்லாமல் போர்டு கூட தொங்கவிட்டனர். 

தொழிலாளர்கள் உள் வேலைக்குக்கூட வர மறுத்து ஔிந்தனர். 

வாகன வசதி மறுக்கப்பட்டது ; காவல்துறை கனிவின்றி நடந்தனர்; அரசுத்துறையினர் அப்பட்டமாக பாகுபாடு காட்டினார்கள். 

அனைத்து குற்றச்சாட்டுகளும் இறைவனின் அருளால் தவிடுபொடியாக்கப்பட்டது. 

அன்று ஒதுக்கியவர்கள் இன்று உறவாட வருகிறார்கள். நமக்கு துவேஷம் இல்லை. படைப்பினங்கள் யாவும் இறைவன் படைத்தவையே. இறைவனை நேசிப்பவர்கள் அவனது படைப்பினங்களையும் அவர்கள் எந்த வழியில் இருந்தாலும் அவர்களையும் நேசிக்கவேண்டும் என்ற அடிப்படையான கொள்கை உடையவரே நாம். 

இந்தப்பதிவின் நோக்கம், பிறரை எதற்கும் சாராமல் நமக்கு தேவையானவற்றை நமது மூலவளங்களைக்கொண்டு நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான். 

உதாரணமாக, பால் தரவில்லை என்று அடுத்தவரை சார்ந்து இருப்பதற்கு பதிலாக நமக்குத்தேவையான பாலை நாமே ஒரு பால் பண்ணை வைப்பதன் மூலம் செய்து கொள்ள இயலாதா? 

நமது பகுதி மருத்துவ வசதிக்காக ஷிபா மருத்துவமனையை உருவாக்கினோமே அதை இன்னும் மேம்படுத்தி , ஒரு மருத்தவக்கல்லூரியாகவும் , பல்கலைக்கழகமாகவும் பரிமாணம் செய்ய இயலாதா? 

அயல்நாடுகளில் நாம் சென்று வடிக்கும் வியர்வையை அந்தந்த வேலைகளை, கைத்தொழிலகளை நாமே கற்று  நமதூர்களில் நாமே அவற்றை செய்து தற்சார்புடையவர்களாக ஆக இயலாதா? இதில் கவுரவத்தை களைய நாம் தயாரில்லையா? 

சிந்திப்போம்! தன்னிறைவு, தற்சார்பு ஆகிய கொள்கைகள் ஒரு சமுதாயத்தை உயர்த்தும் தன்மை வாய்ந்தவை.

ஆக்கம்: இப்ராஹிம் அன்சாரி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...