அதிரையே கொரோனா ஒழிப்பின் முன்மாதிரி - துப்புரவு ஆய்வாளர் புகழாரம்

Editorial
1
அதிராம்பட்டினத்தில் இருந்து சுமார் 20 நபர்களை கொரோனா தொற்று உள்ளாதாக கூறி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் படிப்படியாக 19பேர் குணமடைந்து விடுவிக்கப்பட்டனர்.

இதிக் 44 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த இஸ்மாயில் என்பவர் இன்று மாலை 4 மணியளவில் ரெட்கிராஸ் ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் கொண்டுவரப்பட்டார்.

அவரை வரவேற்க்கும் நிகழ்ச்சி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் இன்று ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், நகர செயற்குழு உறுப்பினர் முஹம்மது தம்பி மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், காவல்துறை அதிகாரிகள் உறவினர்கள் வரவேற்றனர்.

அப்போது பேசிய சுகாதார ஆய்வாளர் அன்பரசன், அதிராம்பட்டினமே கொரோனா ஒழிப்பின் முன்மாதிரி என்று புகாரம்.

Post a Comment

1Comments
  1. அதிரையர்களின் உள்ளங்களை முழுமையாக அறிந்த துப்பரவு ஆய்வாளர் திரு. அன்பரசன் அவர்கள்,அதிரைக்கும் அதிரை முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட ( கொரோனா) களங்கத்தை பேரூராட்சியும், காவல் துறையும் இணைந்து ஆட்டோ விளம்பரம் மூலமும், மற்ற எல்லா வகையிலும் போக்கிட ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...