ரமலான் மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்க அதிரை பிறை இணையதளத்தில் ONLINE மூலம் வினாடி வினா போட்டி ரமலான் பிறை -1 முதல் பிறை 27 வரை நடத்தப்பட்டது. 270 மதிப்பெண்களுக்கான இந்த போட்டியில் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பதிலளித்து வந்தனர்.
இந்த போட்டியில் 3-வது பிடிப்பவருக்கு ₹2,000, 2-ம் இடம் பிடிப்பவருக்கு ₹3,000, முதலிடம் பிடிப்பவருக்கு ₹5,000 பரிசு அறிவிக்கப்பட்டது. அடுத்த 7 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ₹1,000 பரிசு அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியின் விடைகள் திருத்தம் பணி நிறைவடைந்துள்ளதை அடுத்து வெற்றியாளர் விபரங்களை அறிவிக்கிறோம்.
எந்த பரிசுத் தொகையும் அறிவிக்கப்படாமல் தொடங்கப்பட்ட போட்டியில் முதல் நாளில் இருந்தே இவர்கள் அனைவரும் தொடர்ந்து தொய்வின்றி பங்களித்து வந்தனர். இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் அதிரை பிறை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றியாளர்களுக்கான பரிசுகள் நாளை வழங்கப்படும்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமலானிலும் இதை விட சிறப்பாக இந்த போட்டியை நடத்த எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக... கோடி ரூபாய் பரிசும் அற்பமானது தான், இப்போட்டியின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்ட மார்க்க அறிவை ஒப்பிடுகையில்..