அதிரையில் சாலைகளை விழுங்கும் மணல்... சறுக்கி விழும் மக்கள்

Editorial
0

அதிரையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வீடுகளின் வாசலில் கட்டுமானப் பொருட்களான மணல், ஜல்லி போன்றவை கொட்டப்படுவது வழக்கம். ஆனால், தேவைக்கு மீறி ஒரே நேரத்தில் மணலை வாங்கி கொட்டி வைப்பதாலும் திடீரென கட்டுமானப்பணிகள் நின்று போவதாலும் மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்கள் வீட்டு வாசல்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன. 

இவை கொஞ்சம் கொஞ்சமாக சாலைக்கு இரங்கி முழு பாதையையும் சூழ்ந்து விடுகின்றன. அதிரையின் பெரும்பாலான சாலைகளில் இந்த நிலை தொடர்வதை காண முடிகிறது. பல நாட்களாக சாலையை சூழ்ந்து கிடக்கும் மணலால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

சிலர் சறுக்கி விழுந்து எழுந்து செல்வதை பார்க்க முடிகிறது. பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே வீடுகளை கட்டும் மக்கள், வாசலில் கொட்டப்பட்டு கிடக்கும் மணலை நாள்தோறும் வழித்து பரமரித்தால் இதுபோன்ற இடையூறுகளை தவிர்ப்பதுடன், உங்கள் பொருள் வீணாவதையும் தடுக்கலாம். வீடுகளை கட்டித்தரும் பொறியாளர்கள் மற்றும் காண்டிராக்டர்களும் இந்த விசயத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...