அதிரை சுற்றுவட்டாரத்தில் அதிகரிக்கும் கிட்னி நோயாளிகள்..!

Editorial
0
அதிரை, மல்லிப்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் (கிராமங்கள் உட்பட) கிட்னி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே இருப்பதும், ஆனால் அதற்கான போதிய மருத்துவ வசதி நம் அருகிலேயே இல்லாததும் தாங்கள் அறிந்ததே. 

இந்த சூழலில் கணக்கெடுப்பு மூலம் கிட்னி பாதிக்கப்பட்டோரின் தகவல்களை திரட்டும் பணியில் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்து உள்ளதாவது "அதிரையிலேயே அதற்கான சிகிச்சையை அளிக்க ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறோம். கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிறப்பு மருத்துவர்களையும் அதிரைக்கு வரவழைக்க முடியும். 

இதனால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கான வாராந்திர/மாதாந்திர மருத்துவ செலவு கட்டுப்படுத்தப்படுவதுடன் அலைச்சலும் குறையும் என நம்புகிறோம்.

எனவே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து தங்களுக்கு அறிமுகமான கிட்னி பாதிக்கப்பட்டோரின் தகவல்களை பதிவிடவும்.


தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. மிகவும் ரகசியமாக வைக்கப்படும். சமூக நலனை கருத்தில் கொண்டு இதனை அனைவருக்கும் பகிர்வோம்."

அதிரை எக்ஸ்பிரசின் இந்த முயற்சியை அதிரை பிறை ஆதரிக்கிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...