அதிரை வானில் அதிசய நிகழ்வு... வியந்த மக்கள் - காரணம் என்ன?

Editorial
1
-File image

இன்று அதிகாலை சுபுஹ் தொழுகைக்கான பாங்கு சொல்லும் நேரம் அதிரை வானில் ஏராளமான நட்சத்திரங்கள் குவியலாக விழுவதை போன்ற அதிசய காட்சி தென்பட்டுள்ளது. இது சில நிமிடங்கள் வானில் காட்சி தந்ததாக பார்த்தவர் நமதூர் மக்கள் நம்மிடம் தெரிவித்தனர். இது ஏவுகணையா அல்லது எரிகற்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விளக்கம்:
ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து மே மாத பாதிவரை வரை வானில் எட்டா அக்வாரிட் என்ற விண்கல் மழை பொழியும். வெறும் கண்களில் இரவில் பார்க்கக்கூடிய கண்கவர் "எரியும் நட்சத்திரங்களை" கூட்டமாக விழுவதை போல் அது இருக்கும். இதுகுறித்து நாசாவின் விண்கல் சுற்றுச்சூழல் துறை தலைவர் குக் கூறுகையில், விடியற்காலையில் இந்த விண்கல் பொழிவு நடக்கும் என தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு 40 விண்கற்கள் வரை அந்த நேரத்தில் பொழியக்கூடும் அவர் கணித்திருந்தார். நடுத்தர பிரகாசம் கொண்ட இந்த விண்கல் மழை, வானம் இருண்டதாக இருக்கும் போது நன்கு காட்சியளிக்கும் என அவர் கூறினார்.

நாசா ஆய்வாளரின் இந்த விளக்கத்தை வைத்து பார்க்கையில் அதிரையில் தென்பட்டது இந்த விண்கல் மழையாக இருக்கலாம்.
Tags

Post a Comment

1Comments
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...