அதிரையில் கொரோனாவை ஒழித்துவிட்டு புதிய நோய்களை கொண்டு வர திட்டமா?

Editorial
0

அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலையில் ஷிஃபா மருத்துவமனை எதிரே உள்ளது அண்ணா நகர். இங்கு உள்ள கழிவு நீர் வடிகாலில் கடந்த பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அருகில் உள்ள தனியார் மண்டபம், தனியார் வாட்டர் சர்வீஸ் நிறுவனம் மற்றும் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் அதிகளவில் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. இது சரியாக தூர்வாரப்படாததன் காரணமாக கால்வாயின் நீர் வழிப் பாதையில் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர குப்பைகள் அடைப்பட்டு கிடக்கின்றன. இதனால் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியாகும் கழிவு நீர் செல்லாமல் தேங்கி உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் ஷிபா மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இமாம் ஷாபி பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காத்திருப்பார்கள்.

இது குறித்து அதிகாரிகளிடம்  பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் கொசுக்களால் ஏற்படும் அபாயகரமான நோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அஞ்சுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் அதிரை பிறை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை தடுக்க பன்னாட்டு அரசுகள் படாதபாடுபட்டு வரும் நிலையில் வேறு ஒரு புதிய நோய் உருவாகாமல் காக்க சுற்றத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அரசும் அதிகாரிகளும் முயல வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...